தேனி: தேனி மாவட்டம் முழுவதும் முக்கிய சாலை பகுதிகளில் இரவு நேர வாகன விபத்துக்களை தடுக்கும் வண்ணம் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் காவல்துறையினரால் பல்வேறு கட்டங்களாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக வளைவான சாலைப் பகுதிகள், குறுகிய சாலைப் பகுதிகள் மற்றும் அதிக வாகன விபத்துக்கள் நடைபெறும் பகுதியில் இருபுறங்களிலும் வாகன ஓட்டிகள் எளிதில் புரிந்துகொண்டு வாகனங்களை இயக்கும் வகையில் ஒளிரும் பட்டைகளை ஒட்டி வரும் தேனி மாவட்ட காவல்துறையினர்.