திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அடையகருங்குளத்தை சேர்ந்தவர் எட்வின் அருள்ராஜ் (55). முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வரும் இவர், (30.03.26) அன்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் முன்னீர்பள்ளத்தில் இருந்து மேலப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது
எதிரே வந்த பயணிகள் ஆட்டோ, இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், எட்வின் அருள்ராஜ் பலத்த காயமடைந்தார். இது குறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















