திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் காளிமுத்து, (1300). இவர் கடந்த (18.03.2026) ஆம் தேதி ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் (01.04.2026) அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காளிமுத்து உடலுக்கு திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சேகர் தேஷ்முக் சஞ்சய் இ.கா.ப., மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். மேலும் 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க காவல் துறை சார்பாக இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















