மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி போக்குவரத்து உதவி ஆணையர் அவர்களின் தலைமையில் இன்று மாநகரில் குருவிக்காரன் பாலம் சாலை முதல் ராம்நாடு ரிங் ரோடு வரை அதிவேகமாக வந்த இருசக்கர வாகனங்கள் , நம்பர் பிளேட் மாற்றம் செய்துள்ள வாகனங்கள் , குடிபோதையில் வாகனம் இயக்குதல் போன்ற போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்ட அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் தக்க அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வாகனங்களில் தவறான நம்பர் பிளேட்டுகள் நீக்கம் செய்யப்பட்டது. வாகனங்களில் பொருத்தப்பட்ட அதிக ஒளி உமிழும் விளக்குகள் அகற்றப்பட்டு விதிகளை மீறி செயல்பட்ட அனைவருக்கும் தக்க அறிவுரை வழங்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி