மதுரை: மதுரை மாவட்டம் குராயூர் பகுதியில் கணவனை இழந்த பெண் ஒருவர் டீக்கடை நடத்தி வருகிறார். அவரது மகள் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இவர் தனது தாயார் வெளியே சென்றபோது டீ கடையில் வியாபாரம் செய்துள்ளார். அப்பொழுது குராயூர் பகுதியை சேர்ந்த முருகன் 34. இவர் தனியாக இருந்த சிறுமியிடம் ஆபாச வார்த்தைகள் பேசி மாணவியை தொந்தரவு செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் தாயார் திருமங்கலம்அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் செய்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் முருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து முருகனை தேடி வருகின்றனர்.