மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியை சேர்ந்தவர் செல்லபாண்டி (24) இவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்து தனது வீட்டிற்கு அழைத்து வந்து ஒன்றாக வாழ்ந்துவந்ததாகவும்தற்போது சிறுமி 7 மாத கர்பிணியாக்கிய நிலையில் தற்போது சேர்ந்து வாழ மறுப்பதாகவும் அதற்கு செல்லப்பாண்டி மற்றும் பெற்றோர்கள் உடந்தையாக இருப்பதாகவும் கூறி காடுபட்டி காவல் நிலையத்தில் சிறுமி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.வழக்குப் பதிவு செய்த காடுபட்டி போலீசார் 17 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் செல்லப்பாண்டியை , போக்சோ வழக்கில் கைது செய்து தலைமறைவான அவரது பெற்றோர்களை தேடி வருகின்றனர்.