அரியலூர்: அரியலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், (11.04.2026) வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் வாக்குச்சாவடிகளில் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குப்பதிவு மையங்களில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து விரிவாக பரிசோதிக்கப்பட்டது.
மேலும், தேர்தல் செயல்முறைகள் சீராகவும், அமைதியான சூழலில் நடைபெறவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இந்த நடவடிக்கை, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், தேர்தல் நடைமுறை பாதுகாப்பாக நடைபெறவும் உறுதுணையாக அமையும்.




















