மதுரை: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் (23.04.2026) அன்று நடைபெறவுள்ள நிலையில், கடந்த 15.03.2026 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதன் அடிப்படையில், மதுரை மாவட்டத்தில் 16 நிலையான கண்காணிப்பு குழுக்கள் (SST) மற்றும் 16 பறக்கும் படைகள் (FST) என மொத்தம் 32 குழுக்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் 3 பணி மாற்றங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், (01.04.2026) அன்று மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லணை கிராமத்தில், ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின்னர், ஆரத்தி எடுத்தவர்களுக்கு பணம் வழங்கியதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த அஇஅதிமுக கிளைச் செயலாளர் அறிவழகன் (52) மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அலங்காநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















