நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் வாடகை டாக்சி ஓட்டுனர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கோத்தகிரி போக்குவரத்து காவல்துறை சார்பில் இன்ஸ்பெக்டர் திரு.சரவணகுமார், சப்-இன்ஸ்பெக்டர் திரு.ஜான் மற்றும் போலீசார் ஏற்படுத்தி பேசும் போது இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் போது ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து பயணிக்க வேண்டும். வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும். வாகனங்களில் கூடுதல் பாரம் ஏற்றி செல்லக்கூடாது. குடிபோதையில் வாகனங்களை இயக்கக் கூடாது. புதிய போக்குவரத்து திருத்த சட்டத்தின்படி போக்குவரத்து விதி மீறல்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி அபராதம் செலுத்துவதை தவிர்த்து கொள்ள வேண்டும் என்று விளக்கினார்கள்.



















