அரியலூர் : அரியலூர் மாவட்டம் காவல் ரோந்து வாகன எண் 1 அதிகாரி திரு.திருமேனி(உதவி ஆய்வாளர்) அவர்கள் நெடுஞ்சாலையில் பழுதாகி மற்றும் பஞ்சர் ஆகிய நிற்கும் வாகனங்களை தனியார் நடமாடும் பழுது நீக்கம் செய்பவர்களின் உதவியுடன் வாகன ஓட்டுநர்கள் மற்றும் வழிப்போக்கர்களுக்கு உதவி வருகிறார்.
ஒரு வாகனம் பழுது காரணமாக சாலையில் அதிக நேரம் நிற்கும் பொழுது போக்குவரத்து நெரிசல் அல்லது குற்ற சம்பவம் நிகழ வாய்ப்புள்ளது. அவ்வாறு நிகழாத வண்ணம் காவல்துறை செயல்பட்டு வருகிறது. உதவியை பெற்ற வழிப்போக்கர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அரியலூர் மாவட்ட காவல்துறையை பாராட்டி வருகின்றனர்.