தேனி : தேவதானப்பட்டி, பைபாஸ் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் இன்று மாலை ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றிய நபர்களிடம் தீவிர சோதனை செய்யப்பட்டது. இரு சக்கர வாகனங்கள் அனுமதி இல்லாமல் சுற்றினால் பறிமுதல் செய்யப்பட்டது.எஸ்.ஐ. இத்ரீஸ் கான் தலைமையில் போலீஸார் முழுவாகன சோதனை செய்தனர்.
தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேஜஸ்வி உத்தரவின்படி முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தொடர்ந்து வாகனங்கள் பயணிக்கின்றன. . இதனை அடுத்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்ப்பட்ட போடி விலக்கு- தேனி செல்லும் சோதனைச்சாவடியில் , வாகன சோதனையில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் விதிமீறி வரக்கூடிய வாகனங்கள் மற்றும் கொரானா விதி மீறி சுற்றி வருபவர்களை எச்சரித்து தேவையின்றி, வெளியில் வரக்கூடாது என்று அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்.