மதுரை: மதுரை முத்துப்பட்டி பகுதியை சேர்ந்த சுட்டி முனிஸ். இவர் இப் பகுதியில் தொடர்ச்சியாக வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால், இவர் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் திரு.பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார். இதன் பேரில் இவரை போலீசார் கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி