திருநெல்வேலி: திருநெல்வேலியை அடுத்த தாழையூத்து பகுதியைச் சேர்ந்த இளைஞா் ஒருவர் தனது சமூக வலைதள செயலியில் பயங்கர ஆயுதங்களுடன், இரு தரப்பினரிடையே பிரச்னையை தூண்டும் வகையிலான வார்த்தைகளை உபயோகித்து பதிவிட்டிருந்தது காவல்துறையினரின் சமூக வலைத்தள கண்காணிப்பில் தெரிய வந்தது. இது தொடர்பாக, தாழையூத்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து ராஜவல்லிபுரம், பேச்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சுரேஷ் என்ற சூசையை (23). கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















