நீலகிரி : நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கி. பிரபாகர், மற்றும் உதகை நகர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி.யசோதா அவர்கள் உதகை மருத்துவ கல்லூரி கட்டும் பணியில் பணிபுரியும் வட மாநில கட்டிட தொழிலாளர்களிடம் வதந்தி செய்தியின் போலி தன்மை குறித்தும், நீலகிரி மாவட்ட காவல்துறையின் வட மாநில தொழிலாளர்கள் சிறப்பு உதவி எண் (9789800100) குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் இது போன்ற வதந்தியான செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், பிறருக்கு பகிர வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்கள்.