மதுரை: மதுரை வில்லாபுரம் வீட்டுவசதிவாரிய குடியிருப்பு தென்றல்நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் முத்துமணிகண்டன் மனைவி முனீஸ்வரி25.இவர் வடக்குவெளிவீதியில் உள்ள வங்கியில் நகைக்கடன் பெற்றிருந்தார்.இந்த கடனை புதுப்பிக்கவேண்டுமென்று மேலாளர் கூறியுள்ளார்.
பின்னர் ,இது சம்பந்தமாக மேலாளரும், நகை மதிப்பீட்டாளருமான ஹரிஹரபுத்திரனும் சேர்ந்து பல்வேறு ஆவனங்களில் கையெழுத்து வாங்கி உள்ளனர். ரூபாய் நாற்பத்து எட்டாயிரமும் வாங்கி உள்ளனர்.
அதன் பிறகு, நகைக் கடனை மாற்றி வைக்காமல், முனீஸ்வரியின் பன்னிரெண்டு பவுன் நகையையும் ரூபாய் நாற்பத்துஎட்டாயிரத்தையும் மோசடி செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த மோசடி சம்பந்தமாக முனீஸ்வரி விளக்குத்தூண் போலீசில் புகார்செய்தார்.
வங்கி மேலாளர், நகை மதிப்பீட்டாளர் ஹரிஹரபுத்திரன் இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.