விருதுநகர் : விருதுநகர் அருகே கன்னிசேரி -முதலிப்பட்டி ரோட்டில் லச்சக்காரப்பட்டி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பழக்கடை வைத்திருக்கும் வாடியூரைச் சேர்ந்த சிவசக்தி (32), என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை குறுந்தகவல் மூலம் விற்பனை செய்ததை கண்டறிந்து அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு எண்கள் எழுதிய பட்டியல், செல்போன் மற்றும் ரூ.5 ஆயிரத்து 500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சிவசக்தி மற்றும் அருப்புக்கோட்டையை சேர்ந்த பெயர் விலாசம் தெரியாத நபர் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிவசக்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.