விருதுநகர் : விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சுந்தரபாண்டியபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தலா 40 கிலோ கொண்ட 26 மூடை ரேஷன் அரிசி இருந்தது. அதை வேனுடன் பறிமுதல் செய்த போலீசார் வேனில் இருந்த அரிசி உரிமையாளர் சண்முகராஜ் (34), வேன் டிரைவர் திருப்பதி வெங்கடேஷ் (31), தொழிலாளி செல்வகுமார் (34) ஆகிய 3 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.