திருநெல்வேலி: திருநெல்வேலி சுத்தமல்லி காவல் ஆய்வாளர், சுந்தரமூர்த்தி மற்றும் காவலர்கள், நரசிங்கநல்லூர் பிரதான சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. காரில் இருந்தவரிடம் நடத்திய விசாரணையில்,அவர் கொண்டாநகரத்தை சேர்ந்த கணேசன் (36). என்பதும், ரேஷன் கடையில் இருந்து சட்ட விரோதமாக அரிசியை கடத்தியதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர், 750 கிலோ ரேஷன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















