திண்டுக்கல் : திண்டுக்கல் பேகம்பூர், சிக்கந்தர் சாகிப் தெருவை சேர்ந்த முகமது ஷாபான் சேட்(25). ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இவரை நகர் டிஎஸ்பி. கார்த்திக் தலைமையிலான போலீசார் பிடித்து அவரிடமிருந்து 1.100 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் முகமது ஷாபான் சேட் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவரின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை மதுரை மண்டல S.P. சீனிவாசபெருமாள் பரிந்துரையின் பேரில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்கள் முகமது ஷாபான் சேட்டை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















