திருச்சி: கொரோனா பேரிடரால் ஓமன், மஸ்கட், துபாய், சார்ஜா உள்பட வெளிநாடுகளில் வேலைக்கு சென்று தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர திருச்சி விமான நிலையத்தில் இருந்து இந்திய அரசின் சார்பில் சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் இரவு துபாயில் இருந்து ஒரு சிறப்பு மீட்பு விமானம் திருச்சியை வந்தடைந்தது விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். காரைக்குடியைச் சேர்ந்த அயூப்கான் என்பவர் எடுத்து வந்த டார்ச் லைட்டில் ரூ.60.76 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.