சிவகங்கை: ஜெயம் கொண்டான் நிலை கிராமத்தைச் சேர்ந்தவர் திரு.குகன் 29இவர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காந்தவராயன்பட்டி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
குறைந்த கட்டணத்தில் 4 சக்கர வாகனங்களை, பழுது பார்த்து புதுப்பித்துக் கொடுப்பதாக வந்த விளம்பரத்தைப் பார்த்து தனது ஜீப்பை கோவை பீளமேட்டில் உள்ள ஜீப் கிளினிக் என்ற பெயரில் ஒர்க்ஷாப் நடத்தி வரும் கோபால் என்பவரி ம் கொடுத்தார்.
இதற்காக அவரிடம் ஒர்க்ஷாப் அதிபர் கோபால் 4.78 லட்சம் பணம் வாங்கினார்.4 மாதம் ஆகியும் ஜீப்பை பழுதுபார்த்து, புதுப்பித்து கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. மோசடி செய்துவிட்டார்,
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் திரு. குகன் பீளமேடு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசார் ஒர்க்ஷாப் அதிபர் கோபால் மீது மோசடி உட்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.