திருச்சி: திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் நின்றிருந்த சரக்கு வாகனத்தை போலீசார் சோதனையிட்டனர். சிவகங்கை பதிவு எண் கொண்ட அந்த சரக்கு வாகனத்தில் 54 பெட்டிகளில் 647 மதுபாட்டில்கள் இருந்தது.
வெளி மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட இந்த மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.2 லட்சம் ரூபாய் ஆகும். இதனை தொடர்ந்து இந்த மதுபாட்டில்கள் இருந்த சரக்கு வாகனத்தை காந்தி மார்க்கெட் போலீசார், மது விலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் திரு,சுதா அவர்கள் வழக்கு பதிவு செய்து சரக்கு வேனை ஓட்டி வந்தவர் யார்? யாருக்கு இந்த மது பாட்டில்கள் கொண்டு செல்லப்படுகிறது ?என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.