இந்த வருடத்தில் 01/01/ 2023 முதல் 16/05/ 2023 வரை திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட ஒன்பது மாவட்டங்களில் கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் மற்றும் கள்ளத்தனமாக சில்லறை மது விற்பனை செய்பவர்கள் மீது 13,331 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 13 ஆயிரத்து 558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 793 லிட்டர் பாண்டிச்சேரி சாராயமும் 1120 லிட்டர் கள்ள சாராயமும் 11 ஆயிரத்து 254 லிட்டர் சாராய ஊரல்களும் மற்றும் 1980 லிட்டர் கள்ளும்பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவை தவிர 28,617 லிட்டர் சில்லரை விற்பனை செய்த IMFL மதுபானங்கள் மற்றும் நாளா நாளா 441 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டில் கள்ள சாராயம் விற்ற 31 குற்றங்கள் குண்டல் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மூன்று நாட்களில் 14 5 2013ஆம் தேதி முதல் மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களிலும் கள்ள சாராயம் மற்றும் பாண்டிச்சேரி மது வகைகளை ஒழிக்கும் சிறப்பு தீவிர தேர்தல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநில எல்லைகளில் உள்ள மாவட்டங்களான திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை நிரந்தரமாக உள்ள எட்டு மாநில எல்லைகள் எல்லை சோதனை சாவடிகளுடன் கூடுதலாக சோதனை சாதனைகள் அமைக்கப்பட்டும், கண்காணிப்பு ரோந்து வாகனங்கள் நியமிக்கப்பட்டும் தீவிர கண்காணிப்பு வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த மூன்று நாட்களில் 14. 5. 2023 முதல் மத்திய மண்டலத்தில் மொத்தம் 959 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 962 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவற்றில் 19,162 லிட்டர் பாண்டிச்சேரி சாராயமும், 12 லிட்டர் கள்ள சாராயமும், 1389 லிட்டர் சாராய ஊரல்களும் மற்றும் 450 லிட்டர் கல்லும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதைத்தவிர 1268 லிட்டர் சில்லரை விற்பனை செய்த IMFL மது வகைகளும் மற்றும் 15 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கள்ள சாராயம் மற்றும் பாண்டிச்சேரி சாராயங்கள் புழக்கத்தில் உள்ளதை முற்றிலுமாக ஒலிக்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் தனிப்படங்கள் அமைக்கப்பட்டு தொடர் தேடுதல் வேட்டை தொடரும் என்றும் கள்ள சாராயம் தயாரிப்பவர்கள் மற்றும் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது குண்டல் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்