திருநெல்வேலி : திருநெல்வேலி தாலுகா கீழப்பாட்டம் பேருந்து நிறுத்தம் அருகே, அப்பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, இருசக்கர வாகனத்தில் வந்த, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மூதாட்டியிடம் செயினை பறிக்க முயற்சி செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக, மூதாட்டி அளித்த புகாரின் பேரில் தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டதில் மருதூர் இந்திரா நகரை சேர்ந்த உதயகுமார் (19). என்பவர் வழிப்பறி முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர், நஸ்ரின் உதயகுமாரை (12.02.26) அன்று கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். துரிதமாக செயல்பட்டு, குற்றவாளியை கைது செய்த தாலுகா காவல் நிலைய காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.வி. பிரசண்ண குமார், இ.கா.ப., வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















