திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு செல்விநகரைச் சேர்ந்தவா் மேரி பாய் (76).
இவர் (16.04.2025) அன்று வீட்டில் தனியாக இருந்த போது திடீரென சுவா் ஏறி குதித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் மேரிபாயை தாக்கி, அவா் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கநகையைப் பறிக்க முயன்ற போது, அவா் கூச்சலிட்டு போராடியதால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். இத்தகவலறிந்த திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், கீதா மற்றும் காவல்துறையினர் அங்கு வந்து விசாரணை நடத்தியதில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது. அவரது பேரன் சரண் பிரபு (21). என தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்