தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் பகுதியை சேர்ந்த ஆரோக்கியராஜ் 24. அதே பகுதியை சேர்ந்த தாமஸ் ஸ்டீபன் 31 இருவரும் நாட்டுப் படகில் மீன்பிடிக்க சென்றுள்ளார். கடற்கரையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கடலில் வீசியை மீன் வலையை ஆரோக்கியராஜ் இழுத்தபோது திடீரென நிலைதடுமாறி கடலில் விழுந்தார், அருகில் இருந்த தாமஸ் மற்றும் பக்கத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் ஆரோக்கியராஜை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் ஆரோக்கியராஜை காப்பாற்ற முடியவில்லை.
இதனால் ஆரோக்கியராஜ் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வேம்பார் கடலோர காவல் படை போலீசார் மீனவர்களின் உதவியோடு ஆரோக்கியராஜ் உடலை மீட்டு , உடற்கூறு ஆய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்



















