காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், சிவகாஞ்சி மற்றும் காஞ்சி தாலுக்கா காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட வேகவதி ஆற்றுப்படுகையில் சிறிய பாலத்தை முழ்கடித்து அதிகப்படியான நீரானது வெளியேறியது. இதனை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr.திருமதி.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்களும் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் அவர்களும் நேரில் சென்று ஆய்வுசெய்து அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தி பாலத்தை அகற்றி தண்ணீர் தடங்கலின்றி செல்ல வழிவகுத்தார்.
மேலும் அங்குள்ள மக்களை சந்தித்து மக்களிடம் நீரில் இறங்கி குளிக்கவோ, ஆபத்தான முறையில் புகைப்படம் எடுக்கவோ வேண்டாம் என கேட்டுக்கொண்டார். மேலும் பொதுமக்கள் அவ்விடம் செல்வதை தவிர்க்கும்பொருட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக சுழற்சி முறையில் காவலர்களை நியமிக்க உத்திரவிட்டுள்ளார். மேலும் வாலாஜாபாத் அய்யம்பேட்டையில் நடைபெறும் பாலம் சீரமையக்கும் பணியை ஆய்வு செய்து 24 மணி நேரமும் போக்குவரத்து சீராக செல்ல காவலர்களை நியமிக்க உத்திரவிட்டுள்ளார்.