திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன்., இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி திருநெல்வேலி மாவட்ட அனைத்து உட்கோட்ட பகுதிகளிலும் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர், மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதன்படி தாழையூத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ஆனந்தராஜ் அவர்கள் தலைமையில் தாழையூத்து உட்கோட்ட அனைத்து காவல் நிலையங்களிலும், நாங்குநேரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ரஜத் R. சதுர்வேதி இ.கா.ப., அவர்கள் தலைமையில் நாங்குநேரி உட்கோட்ட அனைத்து காவல் நிலையங்களிலும், வள்ளியூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. யோகேஷ் குமார் அவர்கள் தலைமையில் வள்ளியூர் உட்கோட்ட பகுதியில் உள்ள கன்கடியான் பள்ளியிலும், அம்பாசமுத்திரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பல்வீர் சிங் இகா.ப., அவர்கள் தலைமையில் அம்பாசமுத்திரம் உட்கோட்ட பகுதியில் உள்ள தீர்த்தப்பதி பள்ளியிலும், சேரன்மகாதேவி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் சேரன்மகாதேவி உட்கோட்ட பகுதியில் உள்ள SCAD என்ஜினியரிங் கல்லூரியிலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
அனைத்து உட்கோட்ட பகுதியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மொத்தம் 242 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு உள்ளது.
மேலும் 2022 ம் ஆண்டில் இதுவரை மொத்தம் 24838 மனுக்கள் பெறப்பட்டு இதுவரை 24349 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.