தூத்துக்குடி: தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயகுமார் சாலைகளில் செல்லும் பொதுமக்களிடம் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும்,
தேவையில்லாமல் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பல்வேறு பகுதிகளில் சாலைகளில் செல்லும் மக்களிடம் அவர் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
அதோடு சில பகுதிகளில் நிவாரண உதவிகளையும் பொது மக்களுக்கு வழங்கினார் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தூத்துக்குடியில் பரவாமல் நிச்சயம் மக்கள் பாதுக்கப்படுவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி காவல்துணை காண்காணிப்பாளர் திரு.கணேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.