திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், மாவட்டத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்களுக்கு, புலனாய்வு சம்பந்தமாக 4 நாட்கள் சிறப்பு புத்தாக்க பயிற்சி வகுப்பு (06.02.2026) அன்று தொடங்கியது. இப்பயிற்சியில், திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்கள் என மொத்தம் 50 நபர்கள் கலந்து கொண்டனர்.
இந்த புத்தாக்க பயிற்சியானது, புதிதாக அமல்படுத்தப்பட்ட சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் கீழ்,
சந்தேக மரண வழக்குகள், மதுவிலக்கு வழக்குகள், சிறு காயம் மற்றும் கொடுங்காய வழக்குகள், விபத்து வழக்குகள் ஆகியவற்றின் புலன் விசாரணையினை மேம்படுத்தும் வகையில் நடத்தப்பட உள்ளது.
பயிற்சி மையத்திற்கு வருகை தந்த திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர், ப. சரவணன், இ.கா.ப., பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடி, பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழங்கினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















