தேனி: கூடலூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் 70 மாற்றுத்திறனாளிகளுக்கு சுகாதாரத்துறையினர், தன்னார்வலர்கள் மற்றும் உத்தமபாளையம் உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர்
திரு.N.சின்னக்கண்ணு அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் இணைந்து அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய அத்தியாவசியப் பொருட்களை வழங்கியும், கொரோனா தடுப்பூசியின் முக்கியத்துவத்தை
அவர்களுக்கு எடுத்துக்கூறி தடுப்பூசியைப் போட செய்தும், நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மேலும் ஊரடங்கு காலத்தில் தங்களுக்கு உதவிய தேனி மாவட்ட காவல்துறையினருக்கும் தன்னார்வலர்களுக்கும் தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.