திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., உத்தரவின்படி போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகளை குறித்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக (27.08.2024) ஆம் தேதி, டவுன் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர், அந்தோணி ஜெகதா சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள மீனாட்சிபுரம் பெண்கள் பள்ளியில் மாணவிகளிடம் குழந்தை திருமணம், போக்சோ சட்டம், போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. சண்முகநாதன்