திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரத்தில் எட்டு (8) சட்டம் மற்றும் ஒழுங்கு காவல்நிலையங்கள் மற்றும் இரண்டு (2) போக்குவரத்து காவல் நிலையங்களில் ரோந்து பணி, போக்குவரத்து சீர் செய்யும் பணி, வாகன தணிக்கையில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, சீருடையில் அணிய கூடிய 10 Body Worn கேமராக்கள், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (27-01-2026) அன்று திருநெல்வேலி காவல் ஆணையர் முனைவர் .நெ. மணிவண்ணன் இ.கா.ப, வழங்கினார். உடன் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர்கள், மரு.சி.மதன் இ.கா.ப., (மேற்கு) மற்றும் V.வினோத் சாந்தாராம் (கிழக்கு) கலந்து கொண்டனர். இவ் வகை கேமரா வாகன தணிக்கை செய்யும் போதும் ரோந்து பணியின் போதும், நடைபெறும் சம்பவங்களை பதிவு செய்து, வழக்கு விசாரணைக்கு பெரும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















