திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படி விநாயகர் சதுர்த்தி விழாவில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் (27.08.2024) ம் தேதியன்று, மாநகர காவல் துணை ஆணையர், V.கீதா (மேற்கு) G.S.அனிதா, (தலைமையிடம்) ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள், மற்றும் விநாயகர் சிலைகள் வைக்கும் பொறுப்பாளர்கள், விழா ஏற்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழக அரசின் விநாயகர் சதுர்த்தி விழா குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து அனைவருக்கும் எடுத்துரைக்கப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. சண்முகநாதன்