திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஊரக அனைத்து மகளிரி காவல்நிலைய போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுக் கொடுத்த காவல் ஆய்வாளர்கள் திருமதி.நாககுமாரி,திருமதி.ராதா மற்றும் சாட்சிகளை விரைவாக நீதிமன்றதில் ஆஜர்படுத்திய இரண்டாம் நிலை காவலர் திருமதி. முத்துலெட்சுமி அவர்களுக்கும் ஒரே மாதத்தில் 4 கொலை வழக்கு விசாரணையை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலிருந்து, அமர்வு நீதிமன்ற விசாரணைக்கு எடுக்க சிறப்பாக பணிபுரிந்த நாங்குநேரி காவலர் திரு.தளவான், அவர்களுக்கும்,(மேற்படி காவலர் திரு.தளவான் அவர்கள் விடுமுறையில் இருந்த போதிலும் விடுப்பை ரத்து செய்து சிறப்பாக பணியில் ஈடுபட்டார்.
அடையாளம் தெரியாத வாகனம் விபத்து ஏற்படுத்தி சென்ற வழக்கில் வாகனம் மற்றும் அதன் ஓட்டுநரை கண்டுபிடித்த இராதாபுரம் தலைமை காவலர்கள் திரு.ஸ்ரீபால், திரு.கதிரேசன், அவர்களுக்கும் இயற்கையான முறையில் மரணமடைந்தாக கூறப்பட்ட வழக்கில் புலன்விசாரணை மேற்கொண்டு கொலை வழக்கு என கண்டுபிடித்து குற்றவாளியை கைது செய்த உவரி காவல் ஆய்வாளர் திருமதி.பிரேமா, அவர்கள், முதல் நிலை காவலர் திரு.இசக்கிமுத்து, இரண்டாம் நிலை காவலர்கள் திரு.கஷ்டர் ரோனால்டோ, திரு.இலக்கிய விக்னேஷ் அவர்களுக்கும், அம்பை உட்கோட்டத்தில் கஞ்சா விற்பனை, இருசக்கர வாகன திருட்டு, காணாமல் போனவர்கள் வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடித்தற்காக திரு.ஆபிரகாம் ஜோசப், முதல் நிலை காவலர்கள் திரு.சேக் பரித், திரு.முகமதுபஷீர், இதேபோல் அம்பை உட்கோட்டத்தில் தலைமை காவலர்கள் திரு.முகமது ரபிக், முதல்நிலை காவலர் திரு.வேல்முருகன், திரு.பக்கிரி என்ற பாஸ்கர் ஆகியோருக்கும், வி.கே.புரம் காவல் சரகத்தில் 304 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த வழக்கில் உதவி ஆய்வாளர் திரு.முருகேஷ், முதல் நிலை காவலர்கள் திரு.இசக்கிராஜா, திரு.கார்த்திக் பாபு ஆகியோருக்கும், வெகுமதி மற்றும் பரிசு வழங்கினார்.
குற்ற வழக்கு உள்ள 64 குற்றவாளிகளுக்கு நன்னடத்தை பிணை (Bind Over) பெற்றுக் கொடுத்ததற்காக முன்னீர்பள்ளம் காவல்நிலைய திரு. முருகப்பெருமாள் அவர்களுக்கும்
சுத்தமல்லி கொலை வழக்கு குற்றவாளிகளை CCTV கேமரா மூலம் குற்றவாளிகளை கண்டுபிடித்து சிறப்பாக பணிபுரிந்த காவலர் திரு.சரவணன், அவர்களுக்கும்,
காவல் நிலைய பதிவேடுகளை முறையாக பராமரித்து வந்தற்காக திருக்குறுங்குடி காவல்நிலைய தலைமை காவலர் திரு.முத்துக்குமார் உட்பட 23 பேருக்கு வெகுமதி மற்றும் பரிசு வழங்கி ஊக்குவித்தார். மேற்படி ஆய்வு கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜூ, துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.