காஞ்சிபுரம் : குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினம் நவம்பர் 19ஆம் நாள் உலகெங்கிலும் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு பள்ளி குழந்தைகளை அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு குழந்தைகள் உரிமைகள் சட்டம் மற்றும் சமூகப் பொறுப்புகள் தொடர்பான வினாடி வினா போட்டி கட்டுரை போட்டி பேச்சுப்போட்டி காவல் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் போன்றவற்றை நடத்த அனைத்து காவல் கண்காணிப்பாளர்களுக்கும் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் திரு.சைலேந்திரபாபு அவர்கள் அறிவுறுத்தியதன்பேரில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் உத்தரவின்பேரில் காஞ்சிபுரம் மாவட்ட காஞ்சிபுரம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.P.P.ஜீலியஸ் சீஸர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.S.சுனில் ஆகியோர்களின் எல்லைக்குட்பட்ட 12 காவல் நிலையங்களுக்கு அருகில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளை காவல் நிலையம் அழைத்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி வினாடிவினா போன்ற போட்டிகளை நடத்தி வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கியும். மாணவர்களுடன் கலந்துரையாடப்பட்டது. மேலும், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் பள்ளி மாணவ மாணவிகளை அழைத்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தொடர்பாக அவர்களுடன் உரையாடி மேலும் பல்வேறு போட்டிகளை நடத்தி வெற்றி பெற்ற மாணவ மாணவர்களுக்கு பரிசுப்பொருட்களை வழங்கி பாராட்டினார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்