மதுரை: தமிழகத்தில் நடைபெற்ற 2023-24 ஆண்டுக்கான பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 200 குழந்தைகளுக்கு மாநில அளவில் கல்வி சிறப்பு உதவித் தொகையானது வழங்கப்படுகிறது. அதன்படி (14.09.2024) மதுரை மாநகர காவல் துறையில் பணிபுரியக்கூடிய காவலர்களின் குழந்தைகளில் பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற எட்டு குழந்தைகளுக்கு உரிய ஊக்கத்தொகையான ரூ. 1,84,406 /-யை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் IPS., அவர்கள் வழங்கினார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்
திரு.விஜயராஜ்