தேனி: தேனி மாவட்டத்தில் காவல் துறை சாரபில் கொரானா நோய் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வின் ஒரு பகுதியாக, சின்னமனூர் உட்சரக பகுதிக்கு உட்பட்ட மேகமலை- ஹைவேவிஸ், காவல் நிலைய எல்லையில் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் கொரோனா நோய், அதன் பாதிப்பு குறித்து சின்னமனூர் காவல்துறை ஆய்வாளர், லாவண்யா, சார்பு ஆய்வாளர், கதிரேசன் மற்றும் போலீசார் சார்பில் விழிப்புணர்வு நோட்டீஸ் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது. பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது