அரியலூர் : அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள வெத்தியார் வெட்டு கீழத்தெருவை சேர்ந்தவர் பார்வதி (42), இவர் மகளை அதே தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் விஜய் பிரகாஷ் என்பவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று மாலை அபிராமி, அவரது கணவர் விஜய் பிரகாஷ் மற்றும் இவரது தந்தை கலியமூர்த்தி ஆகியோர்களுக்குள் குடும்பத்தில் சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் அபிராமி மீது கலியமூர்த்தி மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அபிராமி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அபிராமி தாய் பார்வதி கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.பெரியசாமி, வழக்குப்பதிவு செய்து கலியமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் பதிவு செய்து, அபிராமியின் கணவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.