சிவகங்கை: சிவகங்கை அண்ணாமலை நகரில் இருதயராஜ், இவரது மகன்கள், ஜோசப்சேவியர் (25), கிறிஸ்டோபர் (22) ஆகியோருடன் வசித்து வருகிறார். அப்போது அவரது தோட்டத்தில் ஒரு கும்பல் மது அருந்தி வருவதாக ஆடு மேய்பவர்கள் இருதயராஜ்க்கு தகவல் தந்தனர்.
உடனே இருதயராஜ் மகன்கள் இருவரையும் அழைத்து கொண்டு தோட்டத்திற்கு சென்று கும்பலிடம் தட்டி கேட்டனர். அப்போது எற்பட்ட தகராறில் கத்தியால் குத்தியதில் கிரிஸ்டோபர் (22) சம்பவ இடத்திலே பலியானார் . அண்ணன் ஜோசப்சேவியருக்கு கத்திகுத்து விழுந்துள்ளது .தந்தை இருதயராஜுக்கும் முகத்தில் காயம் எற்பட்டு தப்பினர்.
சம்பவம் அறிந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிவகங்கை நகர் காவல் துறையினர் மற்றும் மாவட்ட எஸ்.பி திரு.செந்தில்குமார் தலைமையில் சம்பவ இடத்திலும் மருத்துவமனையிலும் ஆய்வு மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.