திருநெல்வேலி : திருநெல்வேலி மேலப்பாளையம் தெற்கு தைக்கா தெருவைச் சேர்ந்தவர் நியாஸ் அலி மகன் நசீம் உசேன் (35). இவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில் (06.02.2026) இரவு அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து நசீம் உசைன் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் மேலப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிலேயே வைத்து பிரசவம் பார்த்த நிலையில், அவரது மனைவிக்கு ஆண் குழந்தை இறந்து பிறந்துள்ளது.
பின்னர் அக்குழந்தையின் உடல் காட்டு ஜூம்மா பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு வர அறிவுறுத்தியும் வரவில்லை எனவும், வீட்டிலேயே பிரசவம் பார்த்து குழந்தை இறந்தது தொடர்பாகவும், மேலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சுமதி மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் நசீம் உசைனை (07.02.2026) அன்று கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















