திருச்சி: திருச்சி மாநகரில் கடந்த சில தினங்களுக்கு முன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு திரிந்த லம்சுமி 65 என்ற மூதாட்டியை மீட்டெடுத்த உப்பிலியபுரம் போலீசார், முதியோர் காப்பகமான அன்பாலயத்தில் ஒப்படைத்தனர். சற்று குணமான நிலையில் அவரை விசாரணை செய்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டதன் பேரில்,
உப்பிலியபுரம் போலீசார் புளியஞ்சோலையை அடுத்துள்ள நெட்டவேலம்பட்டியை சேர்ந்த லட்சுமியின் மகன் பாலமுருகனிடம் ஒப்படைத்தனர். துரிதமாக செயல்பட்டு போலீசார் செய்த சமூக சேவையை பாராட்டிய திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன், உப்பிலியபுரம் சப்இன்ஸ்பெக்டர் திரு.திருநாவுக்கரசு, ஏட்டு திரு.தியானேஸ்வரன் ஆகியோரை நேரில் அழைத்து சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.