அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் 10.12.2022- சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு உறுதி மொழி ஏற்கப்பட்டது.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.பெரோஸ் கான் அப்துல்லா அவர்களின் அறிவுறுத்துதலின் பேரில்,கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.காமராஜ் அவர்கள் தலைமையில்
மனித உரிமைகள் நாள் உறுதி மொழி:
இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்ததக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமாற உறுதிமொழிகிறேன்.*
*எவ்வித வேறுபாடுமின்றி, அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில், நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன்.*
*என்னுடைய எண்ணம், சொல் உள்ளது செயல் மூலம், பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்த ஒரு செயலையும், நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்ய மாட்டேன். மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு நான் எப்பொழுதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமாற உறுதி வருகிறேன்.*
(அனைவரும் மகிழ்ச்சி பொங்க வாழ்வோம்)
என காவல் துறையினர் அனைவரும் உறுதி மொழி ஏற்றனர்.