தேனி : தேனி மாவட்டம் மேரிமாதா கல்லூரியில் கொரோனா பாதுகாப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களிடம் மனித நேயத்துடன் அணுகி அவர்களின் நிறை குறைகளை கேட்டறிந்தும், அவர்களின் தேவையை நிவர்த்தி செய்ய அதற்கான சம்பந்தப்பட்ட துறையினரை அணுகி அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்தும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை அன்புடனும் மனித நேயத்துடன் செய்து சிகிச்சை பெற்று வரும் பொதுமக்கள் மற்றும் மற்ற துறையைச் சேர்ந்த அதிகாரிகளின் மனதை கவர்ந்த தலைமை காவலர் திரு.சையது சோலாப்பீர் பாதுஷா, ஆயுதப்படை காவலர் திரு.கார்த்திக்கேயன் ஆகியோரின் மகத்தான சேவையை பாராட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மரியம் பல்லவி பல்தேவ்,IAS., அவர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து காவலர்களை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி,IPS., அவர்கள் மேலும் சிறப்பாக பணிபுரிய வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.