அரியலூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே மது பாட்டில்களை சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி விற்பனை செய்வதாக தா.பழூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் திரு.சரத்குமார் தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். தெற்கு தெருவை சேர்ந்த ரவி 43. என்பவர் வீட்டின் பின்புறம் விற்பனைக்காக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து 21 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து. இது குறித்து வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தனர்.