முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து 5 பேர் கைது.
மதுரை: மதுரை மாடக்குளத்தில் முன்விரோதத்தில் வாலிபரை வழிமறித்து கத்தியால் குத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொன்மேனி பொன் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் சதீஷ் 27 இவருக்கும் மாடக்குளம் திருப்பதி நகரைச் சேர்ந்த கண்ணன் 31 இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில் மாடக்குளம் திருப்பதி நகர் நுழைவுப் பகுதி அருகே சென்ற சதீஷை கண்ணனும் அவரது நண்பர்களான ரமேஷ் 19 சங்கர் 35, சீனிவாசன் 22, அருன் ரமணன் 24, ஆகிய 5 பேரும் வழிமறித்து சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தி உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சதீஷ் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கத்தியால் குத்திய 5 பேரையும் கைது செய்தனர்.
வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை போலீசார் விசாரணை.
மதுரை: மதுரை கீரத்துரை சிந்தாமணி புதுத்தருவை சேர்ந்தவர் திரவியம் மகன் பெரியசாமி 26. இவர் நள்ளிரவில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் அறிந்த கீரத்துரை போலீசார் பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவரது சாவுக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் தோல்வியால் வாலிபர்தூக்கு போட்டு தற்கொலை.
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சன்னதி தெருவை சேர்ந்தவர் சரவணன் மகன் சூரியகுமார் 22. இவர் ஒரு பெண்ணை காதலித்துள்ளார்.
ஆனால் அவரது காதல் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சூரியகுமார் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திடீர் காய்ச்சலுக்கு ஒன்றே முக்கால் வயது குழந்தை பலி.
மதுரை: மதுரை அண்ணா நகரில் திடீர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒன்றேமுக்கால் வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட் டில் வசித்து வருகிறார் அலெக்சாண்டர் .அவரது ஒன்றேமுக்கால் வயது மகன் தக்ஸித். இந்த குழந்தைக்கு நள்ளிரவில் திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது.
குழந்தையை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தைதக்சித் பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்துகுழந்தையின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி போலீஸ் விசாரணை.
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி அருகே மூன்றாவது மாடியிலிருந்துமெஸ் ஊழியர் தவறி விழுந்து பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் வைரவன் பட்டியை சேர்ந்தவர் முருகன் மகன் அசோக்குமார்21. இவர் மாட்டுத்தாவணி அருகே சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள மெஸ் ஒன்றில் சப்ளையர் ஆக வேலை பார்த்து வந்தார்.
இவர் சம்பவத்தன்று மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார் .அவரை ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து அசோக்குமாரின் தந்தை முருகன் அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தின்பண்டம் உற்பத்தி நிலையத்தில் திடீர் தீ விபத்து:
மதுரை: மதுரை ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெரு 13-வது குறுக்கு தெருவில் பாக்யராஜ் என்பவர் மிச்சர் உள்ளிட்ட பலகாரங்கள் செய்யும். உற்பத்தி செய்து கடைகளுக்கு விநியோகம் செய்யும் தொழில் நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை நான்கு முப்பது மணி அளவில் மிக்சர் மற்றும் பலகாரம் பொருட்கள் தயாரிக்கும் குடோனில் புகை வருவதை அப்பகுதி மக்கள் பார்த்தனர்.
அப்பொழுது ,அருகே சென்று பார்த்தபோது தீ மளமளவென எரிந்து கொண்டு இருந்தது உடனடியாக அப்பகுதி மக்கள் மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கவே,
சம்பவ இடத்திற்கு இரண்டு வாகனங்களில் சென்ற நிலைய அலுவலர் திரு.வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்து குறித்து, அறிந்த மதுரை மாவட்ட உதவி அலுவலர் இது குறித்து விசாரணை மேற்கொண்டார்.
மேலும்,தீ விபத்து சம்பவம் குறித்து, மதுரை ஜெயந்திபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்