மதுரை : மதுரை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரன், வலியுறுத்தலின்படி, மதுரை காவல் ஆணையர் , இந்து மக்களின் கடவுளாகிய சபரிமலை ஐயப்பனை இழிவாக பாடல்களை பாடிய இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் பாடகி இசைவாணி ஆகியோர் மீது புகார் மனு அளித்தோம். மனுவை ஏற்றுக்கொண்ட காவல் ஆணையர் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இதில், பொதுச் செயலாளர் கருட கிருஷ்ணன் ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் கே. எஸ் .கே .வேல் பாண்டியன் துணைத் தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் எம். பாலசுப்பிரமணி பொருளாதார பிரிவு மாவட்டத் தலைவர் வடமலையான், மீனவர் பிரிவு மாவட்டத் தலைவர் கார்த்திக், மீனாட்சி மண்டல் தலைவர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி