மதுரை: மதுரை நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை சாரல் மழை பெய்தது.மதுரை மாவட்டத்தில், கடந்த சில நாள்களாக, பகல் மற்றும் இரவு நேரங்களில் கடும் வெப்பம் நிலவியது. பிற்பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் காரணமாக, சூடானக் காற்று வீசியது.
இரவு நேரங்களில், கடும் வெப்பம் நிலவி வருகிறது. வெப்பத்தை தணிக்கும் வகையில், மதுரை நகரில், கோரிப்பாளையம், தல்லாகுளம், அண்ணாநகர், கோமதிபுரம், யாகப்பநகர், வண்டியூர் பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
இதனால், மதுரை நகரில் மாலை நேரத்தில் லேசாக தணிந்தது. மதுரை நகரில் பெய்த சாரல் மழையால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.