திண்டுக்கல் : திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டியம்மாள் தலைமையில் சார்பு ஆய்வாளர் ராம்சேட் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பட்டிவீரன்பட்டி பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த மதுரைவீரன் மகன் காளிரத்தினம்(49). மற்றும் நத்தம் ரோடு பதநீர் கடை பேருந்து நிறுத்தம் அருகே சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த நீலமேகம் மகன் ஜெயராமன்(70). ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 76 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















