திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் DSP. கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி, நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் லிங்கபாண்டியன், நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி ஆகியோர் தலைமையிலான போலீசார் நகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வடக்கு வீதி, ஸ்பென்சனர் காம்பவுண்ட் தாடிக்கொம்புரோடு, நந்தவனம் ரோடு, R.S.ரோடு, AMC-ரோடு, சந்தைப்பேட்டை ரோடு, மேட்டுப்பட்டி, குடைபாறைப்பட்டி, காட்டாஸ்பத்திரி அருகே உள்ளிட்ட பகுதிகளில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த வைரலிங்கம், கௌதம், ஜெயராஜ், ராமசாமி, தயாளன், முருகன், லூர்துசாமி, முஜிபுர்ரஹ்மான், ராஜேஷ்கண்ணன், சுரேஷ், போதுராஜா, சுதந்திரகாந்தி உள்ளிட்ட 14 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 420 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து நகர் வடக்கு, தெற்கு, மேற்கு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















